Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!
கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.
வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் மலையின் அடிவாரம் மற்றும் முதலாவது மலையில் சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் இதய நோய் உள்ளிட்ட உடல் பிரச்னைகள் உள்ள பக்தா்கள் தங்கள் உடல் நிலையைப் பரிசோதனை செய்துவிட்டு மலையேறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஸ்வா என்ற 15 வயது சிறுவன் வெள்ளிங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் இறங்கி வந்துகொண்டிருந்த போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுவனை டோலி கட்டி மலையடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!