சாகும் வரை ஆயுள் தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 13.05.25 | PollachiCaseJudg...
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 93.66 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.
பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைந்தது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைந்தது.
இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சென்னை மண்டலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய 98.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.