Tourist Family: "எனக்கே டிக்கெட் கிடைக்கல; படம் வெற்றி அடையும்னு தெரியும்; ஆனா.....
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி!
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைக் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் எஸ்எஸ்பி மணீந்தர் சிங் கூறுகையில்,
"நேற்று(திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்த ப்ரப்ஜீத் சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் தயாரிப்புக்கு பொருள்களை வழங்கிய சாஹப் சிங் என்பவரையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கவலைக்கிடமாக உள்ளவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிக்க | எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!