செய்திகள் :

LIC: `இனி வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்தலாம்' - புது வசதியை அறிமுகப்படுத்திய எல்ஐசி

post image

'டிஜிட்டல் மாற்றம்' மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய டிஜிட்டல் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இன்று 'வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்துவதற்கான' ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதி 09.05.2025, அன்று சித்தார்த்த மொஹந்தி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர், நிர்வாக இயக்குநர்கள், எஸ்.எம்.ஜெகநாத், தப்ளேஷ் பாண்டே, சத் பால் பானு மற்றும் ஆர்.துரைஸ்வாமி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில், தொடங்கப்பட்டது. இந்த வசதி எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பிரீமியம் செலுத்த மற்றொரு மாற்று விருப்பத்தை வழங்குகிறது.

LIC | எல்ஐசி

எல்.ஐ.சி போர்டலில் பதிவுசெய்த வாடிக்கையாளர்கள் 8976862090 என்ற வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளைக் கண்டறியலாம் மற்றும் வாட்ஸ்அப் பாட்டில் உள்ள யுபிஐ/நெட் பேங்கிங்/கார்டுகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம்.

பிரீமியம் செலுத்தவேண்டிய பாலிசிகளின் விபரங்கள், பணம் செலுத்துதல் மற்றும் ரசீது பெறும் வரை வாட்ஸ்அப் பாட்டில் மேற்கொள்ளலாம்.

LIC | எல்ஐசி

இது குறித்து, எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்த மொஹந்தி பேசுகையில், ``இந்த வசதி, எல்ஐசி வாடிக்கையாளர்கள் எளிதாகச் செயல்பட உதவும். வேகமாக வளர்ந்து வரும் வாட்ஸ்அப் செயலி மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் எல்ஐசி பிரீமியங்களைச் செலுத்த முடியும். எல்ஐசி-யின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை உறுதிசெய்து செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த இந்த வசதி உதவும்" என்று கூறினார்.

பண(னி)ப்போர்! - எது சரி? எது தவறு? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கணவன் - மனைவி ரெண்டு பேருமே சம்பாதிக்கிறீங்க... ஆனாலும் பணம் பத்தி கவலையா? #LabhamWebinar

நீங்க சம்பாதிக்கிறீங்க. உங்க கணவன்/மனைவியும் சம்பாதிக்கிறாங்க. யோசிச்சு பார்த்தா, பொருளாதாரத்தை பொறுத்தவரை உங்க வாழ்க்கை ரொம்ப ஈஸியா போகுது. ஆனா இந்த நிலை எப்போதுமே நீடிக்குமா?ஒருத்தர் பண நிர்வாகம் பற... மேலும் பார்க்க

Labham: சிங்கப்பூர் & மலேசியாவில் வசிக்கிறீங்களா? உங்க வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம இருக்கணுமா?

நீங்க இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது பெருங்கனவுகளோட அந்த ஃபிளைட்டில் ஏறி இருப்பீங்க! இப்போ அந்தக் கனவு பலிக்கவும் ஆர்மபிச்சு இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் நீங்க இப்போ நிம்மதியா இ... மேலும் பார்க்க

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களாநீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும்வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம்குழந்தைகளின் படிப்பும்போ... மேலும் பார்க்க

கைநிறைய சம்பாதிக்கிறீங்களா? 40 வயதில் ரிட்டையர் ஆகி நீங்க நெனச்ச மாதிரி வாழணுமா?

நீங்க 30 வயசுலேயே ஒரு லட்ச ரூபாய்க்கும்மேலசம்பளம் வாங்குபவரா? வாழ்த்துகள். இது உங்கதிறமைக்கும்உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு இல்லையா? இப்போதான்நீங்க சில முக்கியமான... மேலும் பார்க்க

ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் உங்க கையைக் கடிக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வொரு வருஷமும்பசங்களோட ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ்க்கானதேதி வர்றப்போ ஒரே ஷாக்கா இருக்கா? வயித்துல புளியைக்கரைக்குதா? நாம எப்படி ஃபீல்பண்ணாலும்சரி, அது வருஷாவருஷம் தொடர்ந்து வரக்கூடிய செலவுதான். பெற்றோர்கள் ... மேலும் பார்க்க