செய்திகள் :

Labham: சிங்கப்பூர் & மலேசியாவில் வசிக்கிறீங்களா? உங்க வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம இருக்கணுமா?

post image

நீங்க இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது பெருங்கனவுகளோட அந்த ஃபிளைட்டில் ஏறி இருப்பீங்க! இப்போ அந்தக் கனவு பலிக்கவும் ஆர்மபிச்சு இருக்கும்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் நீங்க இப்போ நிம்மதியா இருக்கீங்க. உங்க குடும்பத்தை நல்லா பாத்துக்குறீங்க. பண விஷயத்தில் உங்களுக்குப் பிரச்னை ஏதும் இல்லை. ஆனா...

சேமிப்பு
சேமிப்பு

இன்னும் எத்தனை நாளைக்கு பணத்தை சேர்ப்பது மட்டுமே உங்க வாழ்க்கையா இருக்கும்? இதுவரை நீங்க பணத்துக்காக உழைச்சாச்சு, உங்க பணம் உங்களுக்காக உழைப்பது எப்போ? இந்தக் கேள்விகள் உங்களுக்குள்ள இருக்கா?

இப்போ நீங்க கொஞ்சம் பணத்தை NRE FD-ல வெச்சிருப்பீங்க. சில ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு லைஃப் இன்ஷூரன்ஸும் எடுத்து இருப்பீங்க. இந்தியாவில் உங்க பெற்றோர் பேருல ஒரு வீடு, நிலம் வாங்கி இருப்பீங்க, கொஞ்சம் தங்கமும் சேர்த்து வெச்சிருப்பீங்க. ஆனா இது மட்டும் போதாதுன்னு உங்களுக்கும் தெரியும். அடுத்து இன்னும் பெருசா சொத்துக்களை வளர்க்கணும், ஆனா எங்கே, எப்போன்னு உங்களுக்கு தெரியாது. மேலும் அதற்கான நேரமும் உங்களுக்கு இல்லை... இல்லையா?

உங்க பணம் நாளை உங்களைக் காப்பாத்துமா?

நீங்க சம்பாதிக்கும் ஒவ்வொரு சிங்கப்பூர் டாலரும் மலேசியன் ரிங்கிட்டும் உங்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கான்னா, இல்லை என்பதே உண்மை. நீங்க கஷ்டப்பட்டு அயல்நாட்டில் சம்பாதிக்கும் பணம் சரியான முறையில் வளருதான்னு உங்களுக்கு தெரியுமா? வருங்காலத்தில் அந்தப் பணம் உங்களையும் உங்க குடும்பத்தையும் காப்பாற்றுமான்னு உங்களுக்குத் தெரியுமா? பதில் சொல்லத் தெரியலைனா மேலும் படிங்க...

உங்க பணம் நாளை உங்களை காப்பாத்துமா
உங்க பணம் நாளை உங்களை காப்பாத்துமா

இந்தப் பிரச்னையை நீங்க இப்பவே தீர்ப்பது ரொம்ப முக்கியம். ஆண்டுகள் போகப்போக உங்களின் வேலைகளும் பொறுப்புகளும் அதிகரிக்கவே செய்யும். வயதான பெற்றோரையும் குழந்தைகளையும் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். இந்த நிலையில் நீங்க இந்தியா திரும்பும்போது, நீங்க சேர்த்து வைக்கும் பணம் உங்க வாழ்க்கைக்கு போதுமானதா இருக்குமா?

நீங்க லட்சக்கணக்கில் சம்பாதிச்சாலும் இன்னும் 10 ஆண்டுகளில் அந்தப் பணம் உங்களைக் காப்பாற்றுமான்னு தெரியுமா? தெரியலைனா அதுதான் மிகப்பெரிய ரிஸ்க். இந்த முக்கிய விஷயத்தை சரி செய்ய நீங்க தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் உங்க வளர்ச்சியும், மன நிம்மதியும் குறைஞ்சுட்டே வரும். சரி, இதற்கான எளிமையான தீர்வு வேணுமா?

உங்கள் வருங்காலத்தை வளமாக்கும் வெபினார்

வரும் மே 10, 2025 சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் & மலேசியா வாழ் இந்தியர்களுக்கான ஒரு சிறப்பு வெபினாரை விகடன் 'லாபம்' நடத்த இருக்கு.

60 நிமிடங்களில் நீங்க தெரிஞ்சுக்கப் போகும் விஷயங்கள்:

* ஒரு NRI-ஆக இந்தியாவில் எளிமையாக முதலீடு செய்வது எப்படி?

* உங்கள் சொத்துகளை பன்மடங்காக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

* வங்கி வைப்பு நிதி, தங்கம் தாண்டி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உகந்த முதலீடுகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்
மியூச்சுவல் ஃபண்ட்ஸ்

* வரி, டாக்யூமென்டேஷன் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்யும் சட்ட திட்டங்கள் என்னென்ன?

* உங்கள் முதலீடுகள் எவ்வளவு வளர வாய்ப்புள்ளது?

* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள்...

நீங்க கைநிறைய சம்பாதிக்கிறீங்க, ஆனா எங்க எப்படி முதலீடு செய்யுறதுன்னு தெரியலையா? உங்க குடும்பத்தின் வருங்காலத்தை மகிழ்ச்சியாக ஆக்கணும்னு விருப்பமா? உங்க ஓய்வுக்காலம் பணப் பிரச்னையே இல்லாம நிம்மதியா இருக்கணுமா? மறக்காம விகடன் லாபம் நடத்தும் வெபினாரில் கலந்துக்கோங்க.

தலைப்பு: இந்தியாவில் செல்வம் சேர்க்கலாம்!

நாள்: மே 10, 2025, சனிக்கிழமை

நேரம்: 11:30 -12:30 மணி (சிங்கப்பூர் & மலேசிய நேரம்)

பேச்சாளர்கள்: R. செந்தில் குமார், நிறுவனர் & தலைமை செயல் அதிகாரி, கேப்பிட்டல் டைனமிக்ஸ் & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

வெபினாரில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே இதில் அனுமதி. சிங்கப்பூர் & மலேசியா வாழ் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய: https://forms.gle/ztkTFZRw9qrX7WsL9

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களாநீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும்வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம்குழந்தைகளின் படிப்பும்போ... மேலும் பார்க்க

கைநிறைய சம்பாதிக்கிறீங்களா? 40 வயதில் ரிட்டையர் ஆகி நீங்க நெனச்ச மாதிரி வாழணுமா?

நீங்க 30 வயசுலேயே ஒரு லட்ச ரூபாய்க்கும்மேலசம்பளம் வாங்குபவரா? வாழ்த்துகள். இது உங்கதிறமைக்கும்உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு இல்லையா? இப்போதான்நீங்க சில முக்கியமான... மேலும் பார்க்க

ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் உங்க கையைக் கடிக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வொரு வருஷமும்பசங்களோட ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ்க்கானதேதி வர்றப்போ ஒரே ஷாக்கா இருக்கா? வயித்துல புளியைக்கரைக்குதா? நாம எப்படி ஃபீல்பண்ணாலும்சரி, அது வருஷாவருஷம் தொடர்ந்து வரக்கூடிய செலவுதான். பெற்றோர்கள் ... மேலும் பார்க்க

Insurance: காப்பீடும் முதலீடும்; ஒரு நிமிஷம்! இன்ஷூரன்ஸ் எடுக்க போறீங்களா? எடுத்தாச்சா? இதைப் படிங்க

தலைக்கு தலைக்கவசம், வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ்! தலைக்கவசம் எப்படி நம் உயிரைக்காக்குதோஅதேமாதிரிநம் உடல் நலம் பாதிக்கப்பட்டாமருத்துவ காப்பீடும், நாம் உயிரிழந்தாநம்ம குடும்பத்தை ஆயுள் காப்பீடும் காக்கும். அ... மேலும் பார்க்க

ட்ரம்ப் அதிரடி... பங்குச் சந்தை இனி எப்படி போகும்? ஃபண்ட் நிபுணர் சுனில் சுப்பிரமணியம் விளக்கம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் அதிரடி நடடடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறார். கடந்த வாரத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கும் இறக்குமதி வரியை ஏகத்துக்கும் உயர்த்தி, அன... மேலும் பார்க்க