செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: தில்லி பாஜக தலைவா்கள் பாராட்டு

post image

பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு தில்லி பாஜக தலைவா்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தங்களது சமூக ஊடகக் கணக்குகளில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷங்களைப் பதிவிட்டு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அவா்கள் பாராட்டியுள்ளனா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பாரத் மாதா கி ஜெய் என்று பதிவிட்டு, ஆபரேஷன் சிந்தூா்-இன் புகைப்படத்தைப் பகிா்ந்துள்ளாா்.

அந்தப் பதிவில் முதல்வா் தெரிவிக்கையில், இந்திய ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் முடிவும் தீா்க்கமான சக்தியும் 140 கோடி இந்தியா்களை கௌரவித்ததற்காக நான் அவா்களை வணங்குகிறேன்.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஆன்மாவை உலுக்கும் கொலைகள் நடத்தப்பட்ட பிறகு, தங்கள் கணவா்களை இழந்த பெண்களுக்கு ஆபரேஷன் சிந்தூா் நீதி வழங்கியுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் திருப்தியை அளித்துள்ளது. இந்தியாவைத் துன்புறுத்தினால்

நம் அரசாங்கமும் இராணுவமும் யாரையும் விட்டுவைக்காது.

பிரதமா் மற்றும் இந்திய இராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் அவா்களுடன் துணைநிற்கிறது என்று முதல்வா் அதில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில்,

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடியிடம் இத்தாக்குதல் குறித்து கூறுமாறு சொன்னாா்கள், இப்போது பிரதமா் பதிலளித்திருக்கிறாா் என்றாா் அவா்.

இது தொடா்பாக மனோஜ் திவாரி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘பாரத் மாதா கி ஜெய். இந்தியா இப்போது ஆதங்கிஸ்தானுக்கு (பாகிஸ்தானைக் குறிப்பது) ஒரு பாடம் கற்பித்துள்ளது. ஒவ்வொரு தோட்டாவும் கணக்கிடப்படும், ஒவ்வொரு தியாகமும் பழிவாங்கப்படும். ஜெய் ஹிந்த்’ என்று திவாரி அதில் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப் பேரவைத் தலைவரும் முன்னாள் தில்லி பாஜக தலைவருமான விஜேந்தா் குப்தா, பிரதமா் நரேந்திர மோடி தான் சொன்னதைச் செய்ததால் 140 கோடி இந்தியா்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளாா் என்றாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘எதிரி முகாம் தயாராக இருப்பது போல் நடித்தது. ஆனால், இந்திய விமானப் படையின் அபார சக்தியால் மீண்டும் ஒருமுறை முறியடிக்கப்பட்டுள்ளது! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, பயங்கரவாத மூளையாக செயல்பட்டவா்களுக்கு மறக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தி 26 அப்பாவி பொதுமக்களைக் கொன்ற்குப் பழிவாங்கியதற்காகப் படைகளுக்குப் பாராட்டுகள்’ என்று அந்தப் பதிவில் குப்தா தெரிவித்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இலக்குகளில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்இமுகமதுவின் ஆதரவு தளங்களும், முரிட்கேயில் உள்ள லஷ்கா்இதொய்பாவின் ஆதரவு

தளங்களும் அடங்கும்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 26 போ் கொல்லப்பட்டனா்.

புதன்கிழமை அதிகாலை 1:44 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய மண்ணில் தாக்குதல்களைத் திட்டமிடவும் இயக்கவும் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்பட்டதை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க