செய்திகள் :

தவறான தகவல்களைப் பரப்பும் பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

post image

பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த போர்ப் பதற்றம் இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு எட்டியதைத் தொடர்ந்து இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்களிடம் பேசினார்.

பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்புரையாகச் செய்துள்ளனர். ஜம்மு, பதான்கோட், பூஜ் பகுதிகளில் விமான நிலையங்கள் சேதம் என்பது பொய்யான தகவல்.

பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரோடர்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டன. அதேபோன்று சண்டீகர், வியாஸில் வெடிமருந்து கிடங்கு சேதம் பாகிஸ்தான் தரப்பில் கூறியதும் முற்றிலும் தவறான தகவலாகும்.

இந்திய ராணுவம் மசூதிகளைச் சேதப்படுத்தியாக பாகிஸ்தான் கூறியது பொய்யான குற்றச்சாட்டு. இந்தியா மதச்சார்பற்ற தேசம், நமது ராணுவம் அரசமைப்பின் மிக அழகான பிரதிபலிப்பு என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க