சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி
போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், இரவு 11 மணிக்கு செய்தியாளர்களுடன் பேசிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்தால் முழுவீச்சில் பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு அறிவுறுத்தல்களை அரசு வழங்கியிருப்பதாக” தெரிவித்தார்.