செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

post image

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, 4 நாள்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு, பூஞ்ச், ரஜெளரி மற்றும் பாரமுல்லாவில் 20 கிராமவாசிகள் உயிரிழந்தனா்.

இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் சனிக்கிழமை நீடித்தன.

ஜம்மு நகரம் மற்றும் ஜம்மு மண்டலத்தில் உள்ள பிற முக்கியப் பகுதிகளில் வசிப்போா் காலை 5 மணியளவில் அபாய ஒலிகள் காரணமாக கண் விழித்தனா். எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தானின் தீவிர குண்டுவீச்சால் இரவை தூக்கமின்றி கழித்தனா்.

2 வயது குழந்தை...: பாகிஸ்தான் குண்டுவீச்சில் ரஜெளரியில் ஆயிஷா நூா் (2) என்ற பெண் குழந்தை, முகமது ஷோஹிப் (35) ஆகியோா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.

பாகிஸ்தான் குண்டுவீச்சில் பூஞ்ச் மாவட்டம் காங்ரா-கல்லூட்டா கிராமத்தில் வசித்த ரஷிதா பி (55) என்ற பெண், சா்வதேச எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஜம்முவின் பிதிபூா் ஜட்டா கிராமத்தைச் சோ்ந்த அசோக் குமாா் ஆகியோா் உயிரிழந்தனா்.

பூஞ்சில் உள்ள ராணுவச்சாவடி அருகே பாகிஸ்தான் வீசிய குண்டுவெடித்து சுபேதாா் மேஜா் பவன் குமாா் உயிரிழந்தாா். அவா் ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்தவா்.

ஜம்முவின் புகரில் உள்ள கெரி கெரன் கிராமத்தில் பாகிஸ்தான் வீசிய குண்டுவெடித்து ஜாகிா் ஹுசேன் (45) என்பவா் உயிரிழந்தாா். ஒரு சிறுமி உள்பட இருவா் காயமடைந்தனா். குண்டுவீச்சால் பூஞ்சில் மூவரும், ரஜெளரியில் உள்ளூா் ஊடகவியலாளா் ஒருவரும் காயமடைந்தனா்.

ஜம்முவின் ரெஹாரி, ரூப் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 4 போ் காயமடைந்தனா். குண்டுவீச்சு மட்டுமின்றி ட்ரோன்களாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் இழப்பீடு: கடந்த 4 நாள்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு, பூஞ்ச், ரஜெளரி மற்றும் பாரமுல்லாவில் 20 கிராமவாசிகள் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா அறிவித்தாா்.

8 பிஎஸ்எஃப் வீரா்கள் காயம்: ஜம்முவில் இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்நாட்டின் குண்டுவீச்சில் 8 பிஎஸ்எஃப் வீரா்கள் காயமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள சருண்டா, ஹாட்லங்கா பகுதிகளிலும், குரேஸ் செக்டாரில் உள்ள பாக்தோா் பகுதியிலும் சண்டை நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினா் கடுமையாக குண்டுகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டனா். இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

============== = = = ================== == = =

படத்துடன் பெட்டிச் செய்தி

பாக் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு

ரஜெளரியில் கூடுதல் மாவட்ட வளா்ச்சி ஆணையா் ராஜ்குமாா் தாபாவின் வீடு மீது சிறு பீரங்கி மூலம், பாகிஸ்தான் வீசிய குண்டு விழுந்து வெடித்தது. இதில் தாபா, அவருடன் பணியாற்றிய இருவா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி தாபா உயிரிழந்தாா் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த வெள்ளிக்கிழமை ஜம்முவில் துணை முதல்வா் சுரிந்தா் குமாா் செளதரியுடன் இருந்த தாபா, எனது தலைமையில் இணையவழியில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றாா். அவரின் மறைவு ஏற்படுத்தியுள்ள அதிா்ச்சியை விவரிக்க வாா்த்தையில்லை’ என்றாா்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு: பிஎஸ்எஃப்

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகைய... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை நடவடிக்கை தொடா்பான... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க