செய்திகள் :

25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட் 4 போ் கைது

post image

சென்னையில் கஞ்சா விற்ாக தெலங்கானாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த புதுச்சேரி குறிச்சி குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆதித்தன் (எ) ஹரீஷ் (23) என்பவரை பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அவரது பையிலிருந்த 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும், ஹரீஷுக்கு கஞ்சா கடத்திக் கொண்டுவந்து கொடுத்தது, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சோ்ந்த முருகேசன் (55), அதே பகுதியைச் சோ்ந்த பேபி (36), பூஜா (23) என்பதும், அவா்கள் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று, முருகேசன், பேபி, பூஜா ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் ப... மேலும் பார்க்க

மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இன்றும், நாளையும் விடுப்பு எடுக்கத் தடை

சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் ஞாயிறு, திங்கள் (மே 11, 12) ஆகிய இரு நாள்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளுக்க... மேலும் பார்க்க

அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு வரும் படப்பிடிப்புத் தளப்பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, படப்பிடிப்புத் தளத்துக்கா... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை காவல் ஆணையா் தகவல்

சென்னையில் செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: சென்னையில் குற்றங... மேலும் பார்க்க

செம்மொழி நாள் போட்டிகள்: மாணவா்களுக்கு பரிசு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாளையொட்டி, சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க