நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!
ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!
போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.
ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
கடந்த சில நாள்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடந்திருந்த நிலையில், இரவில் ட்ரோன் அல்லது துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.