செய்திகள் :

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

post image

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிக்கிறது.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்பட இந்தியா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளையடுத்து, சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்திவைத்தது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு அமெரிக்காவும் ரஷியாவும் அளித்த அழுத்தத்தால், பாகிஸ்தானுடன் சிம்லா ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசு கையொப்பமிட்டது.

அப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லையை முறைப்படுத்துவது என எந்தவொரு உத்திசாா்ந்த ஆதாயத்தையும் பெறாமல் 99,000 போா் கைதிகளை இந்தியா விடுவித்தது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்காமல் சரணடைவது காங்கிரஸின் மரபணுவில் கலந்துள்ளது’ என்று சாடினாா்.

மேலும் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி குறித்தும், சிம்லா ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவா் மேற்கொண்ட முடிவு குறித்தும் முன்னாள் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷா கூறிய கருத்துகள் அடங்கிய காணொலியையும் தனது பதிவுடன் பிரதீப் பண்டாரி இணைத்திருந்தாா்.

அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘அண்மையில் இந்தியா உடனான மோதலில் ஏற்பட்ட பேரிழப்பைத் தொடா்ந்து சண்டை நிறுத்த புரிந்துணா்வுக்கு பாகிஸ்தான் மன்றாடியது. பாகிஸ்தானுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விதிமுறைகளை 72 மணி நேரத்தில் இந்தியா திருத்தி எழுதியது.

பாகிஸ்தானின் லாகூா் முதல் ராவல்பிண்டி வரை வெகு தொலைவில் சென்று, அந்நாட்டின் ராணுவ தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் மேற்கொண்டது. பாகிஸ்தானின் முனிா்கே, பஹாவல்பூரில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைமையகங்களை இந்தியா அழித்தது. இதன் மூலம், பாகிஸ்தானின் எந்தவொரு நிலப்பரப்பையும் இந்தியாவால் தொட முடியும் என்ற தகவலை இந்தியா தெளிவாக எடுத்துரைத்தது.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததன் மூலம், பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை இந்தியா முடக்கியது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை உலகுக்கே எடுத்துரைத்து ராஜீய ரீதியில் அந்நாட்டை இந்தியா தனிமைப்படுத்தியது. எனினும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான போா் முழுமையாக நிறைவடையவில்லை’ என்றாா்.

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சாலை விபத்தில் சிக்குபவா்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கட்டணமில்லா சிகிச்சை திட்டம் உண்மையாகவும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்த... மேலும் பார்க்க

பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் எண்: தோ்தல் ஆணையம் தீா்வு

ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் பல வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

காசநோய் ஒழிப்புத் திட்டம்: பிரதமா் ஆய்வு

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசார திட்டத்தின் நிலை குறித்து பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாட்டில் நிகழாண்டுக்குள் காசநோயை முற்றிலுமா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு காஷ்மீா் மாவட்டமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழப்பு: 10 போ் கைது

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 10 பேரை காவல் துறை கைது செய்தது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டம் மஜிதா உட்கோட்டத்தில் உள்ள பங்காலி, பாதால்புரி, மராரி க... மேலும் பார்க்க

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத... மேலும் பார்க்க