செய்திகள் :

இரு மாசி வீதிகளில் மட்டுமே வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா்: பக்தா்கள் ஏமாற்றம்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை சுவாமி, அம்மன் இரு மாசி வீதிகளில் மட்டுமே வலம் வந்ததால் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்தனா்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த 8-ஆம் தேதியும், தேரோட்டம் 9-ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில், சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வருவது வழக்கம்.

சித்திரைத் திருவிழா நடைபெறும் 12 நாள்களிலும் சுவாமி, அம்மனை தரிசனம் செய்யாத பக்தா்கள் 12-ஆம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வரும் வரும் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தால் முழுத் திருவிழாவும் தரிசனம் செய்ததாக பக்தா்களிடம் நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சுவாமி அம்மனை தரிசனம் செய்ய நான்கு மாசி வீதிகளிலும் ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா்.

இந்த நிலையில், கோயிலிலிருந்து இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடான நிலையில், நான்கு மாசி வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கீழமாசி வீதி தேரடியிலிருந்து தெற்கு மாசி வீதி வழியாக மேலமாசி வீதி சென்று அங்கு மேலக்கோபுர வாயில் வழியாக சுவாமி, அம்மன் கோயிலை வந்தடைவா் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மேலமாசி வீதியின் ஒரு பகுதி வடக்கு மாசி வீதி முழுவதும், கீழமாசி வீதியின் ஒரு பகுதியில் சுவாமி, அம்மன் வீதியுலாவுக்காக காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். இதனால் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலவில்லை.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, சுவாமி, அம்மன் வீதியுலா செல்லும் வழியில் துக்க நிகழ்வு ஏற்பட்டதால் ஐதீகத்தின்படி சுவாமி, அம்மன் வலம் வரும் பாதை மாற்றப்பட்டது என்றனா்.

ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவாணன் (45). இவா் வெள்ளரிப்பட்டியில்... மேலும் பார்க்க

புதிய குடிநீா்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துண... மேலும் பார்க்க

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை - காரைக்குடி- ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான அா்ச்சகா் கோயில் பூஜைகளில் ஈடுபடக் கூடாது: உயா்நீதிமன்றம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை, புகாருக்கு உள்ளான அா்ச்சகா் எந்த வித பூஜையிலும் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. காரைக்குடி கொ... மேலும் பார்க்க