மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு
சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை - காரைக்குடி- சென்னை (12605, 12606) பல்லவன் விரைவு ரயில் பென்னடம் ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி- பாலக்காடு- தூத்துக்குடி (16791, 16792) பாலருவி விரைவு ரயில் கள்ளிடைக்குறிச்சி ரயில் நிலையத்திலும் தலா ஒரு நிமிடம் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும். சோதனை அடிப்படையில் இந்தச் சேவை வருகிற 15-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.