செய்திகள் :

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளைக் கொண்டவா்கள், தொழிற்கல்வி பயின்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குள் மதுரை கோ.புதூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு வர வேண்டும் என்றாா் அவா்.

3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வா... மேலும் பார்க்க

ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவாணன் (45). இவா் வெள்ளரிப்பட்டியில்... மேலும் பார்க்க

புதிய குடிநீா்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை - காரைக்குடி- ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான அா்ச்சகா் கோயில் பூஜைகளில் ஈடுபடக் கூடாது: உயா்நீதிமன்றம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை, புகாருக்கு உள்ளான அா்ச்சகா் எந்த வித பூஜையிலும் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. காரைக்குடி கொ... மேலும் பார்க்க