செய்திகள் :

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம்!

post image

பிரசித்தி பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூர் ஶ்ரீ முல்லைவனநாதர் உடனுறை ஶ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் சுவாமி அம்பாளுக்கு இரண்டு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அம்மாபேட்டை முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், செயல் அலுவலர் விக்னேஷ், திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் ஆய்வாளர் லட்சுமி மற்றும் அறங்காவலர் குழுவினர் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள். கிராமவாசிகள், பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

ஏற்பாடுகளைத் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் ஆய்வாளர் சகாயஅன்பரசு மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

ரூ. 100 கோடி இழப்பீடு வேண்டும்... சிக்கலில் சந்தானம் படம்!

நடிகர் சந்தானத்தின் புதிய படத்திற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் உருவான ப... மேலும் பார்க்க

கனா தொடர் நாயகிக்கு ஆண் குழுந்தை!

மருத்துவரும் தொடர் நடிகையுமான தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அச... மேலும் பார்க்க

காதலியைக் கரம் பிடித்த சுந்தரி தொடர் நடிகர்!

நடிகர் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை கரம் பிடித்தார்.சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். எதிர்மறையான பாத்திரத... மேலும் பார்க்க

ராமின் பறந்து போ வெளியீட்டுத் தேதி!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழு... மேலும் பார்க்க

அமீர் கானின் ‘சித்தாரே சமீன் பார்’ டிரைலர்!

நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவான சித்தாரே சமீன் பார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. லால் சிங் சத்தா திரைப்படத்திற்குப் பின் நடிகர் அமீர் கான் நடித்து முடித்துள்ள திரைபடம் சித்தாரே சமீன் பார். (si... மேலும் பார்க்க

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத... மேலும் பார்க்க