‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!
நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்றம் எதுவும் இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூகுள் தனது லோகோவில் உள்ள 'ஜி' எழுத்தை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.
புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவில் 'ஜி' நிறம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. புதிய கூகுள் லோகோவில் 'ஜி' வண்ணங்களுக்கு இடையில் தடையற்ற மாற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த லோகோ தற்போது ஆப்பிள் மற்றும் பிக்சல் போன்களில் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற ஆண்டராய்டு செல்போன்களுக்கும் புதுப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது. தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து ‘கிரேடியண்ட்’ லுக்கில் உள்ளது. இது புதிய 'ஜி' லோகோ ஒரு சமகால தோற்றத்தை அளிப்பதுடன் ஏஐ-இல் கூகுள் கவனம் செலுத்தி வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவ சொற்கள் போன்ற தொழில்நுட்ப வார்த்தைகளை எளிதில் புரிந்துகொண்டு விளக்கக் கூடிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் கடைசியாக கடந்த 2015 செப்டம்பரில் தனது 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தி இருந்தது. மாடர்ன் லுக்கில் சான்ஸ்-செரீப் டைப்ஃபேஸில் அது காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.