செய்திகள் :

பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவு!

post image

மும்பை: சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவிகிதமாகக் குறைந்ததால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.

தனிந்து வரும் பதற்றம், அமெரிக்காவில் ஏப்ரல் மாத பணவீக்கத் தரவு மற்றும் உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் இடைநிறுத்துதல் ஆகியவற்றால் பங்குச் சந்தை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில், 30-பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தையின் அளவுகோல் அளவான சென்செக்ஸ் 182.34 புள்ளிகள் உயர்ந்து 81,330.56 புள்ளிகளாகவும், நிஃப்டி 88.55 புள்ளிகள் உயர்ந்து 24,666.90 புள்ளிகளாக நிலைபெற்றது. அதே வேளையில் சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 81,691.87 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 80,910.03 புள்ளிகளை தொட்டது.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், எடர்னல், டெக் மஹிந்திரா, மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் ஏஷியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எடர்னல் ஆகியவை உயர்ந்தும் ஏஷியன் பெயிண்ட்ஸ், சிப்லா, டாடா மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.6 சதவிகிதம் உயர்ந்தன.

வங்கி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளுமான ரியல் எஸ்டேட், எண்ணெய் & எரிவாயு, தொலைத்தொடர்பு, ஊடகம், ஐடி மற்றும் உலோக குறியீடுகள் 1 முதல் 2.5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.

மார்ச் 2025 காலாண்டில் பாரதி ஏர்டெல் லிமிடெட் நிகர லாபம் 1 சதவிகிதம் உயர்ந்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.11,022 கோடியாக உயர்ந்தது. இதற்கு கட்டண உயர்வு மற்றும் ஒரு முறை அரசு வழங்கிய வரிச் சலுகையாகும்.

மார்ச் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் சரிந்து ரூ.8,556 கோடியாக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிந்து முடிந்தன.

ஐரோப்பிய குறியீடுகள் 0.5 சதவிகிதம் சரிவுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.13 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 65.88 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.476.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆதம் இன்வெஸ்ட்மென்ட், ஹிட்டாச்சி எனர்ஜி, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், மேக்ஸ் ஃபைனான்சியல், சியட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், மசகான் டாக், டால்மியா பாரத், ஜே. கே. சிமென்ட், சிட்டி யூனியன் வங்கி, பாரத் டைனமிக்ஸ், ஏபிஎல் அப்பல்லோ, சோலார் இண்டஸ்ட்ரீஸ், காட்ஃப்ரே பிலிப்ஸ், பாரதி ஹெக்ஸாகாம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார உயர்வை பதிவு செய்தது.

இதையும் படிக்க: எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!

அக்ஸோ நோபல் 4-வது காலாண்டு லாபம் சரிவு!

புதுதில்லி: வண்ணப்பூச்சு மற்றும் பூச்சுகள் தயாரிப்பாளரான அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.4 கோடியாக குறைந்துள்ளதாக அறி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட லாபம் மற்றும் நேர்மறையான பொருளாதார தரவுகள் காரணமாக இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.2... மேலும் பார்க்க

டாடாவின் அல்ட்ரோஸ் இப்போது புது வடிவில்!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, அதன் அல்ட்ரோஸ் மாடலை தற்போது புதுப்பித்துள்ளது. முதன்முதலாக 2020ல் அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். புதிதாக மேம்படுத்... மேலும் பார்க்க

ஷாவ்மிக்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ் 300 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் 6,800mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ள நிலை... மேலும் பார்க்க

அதிக பேட்டரியுடன் தயாராகும் ஷாவ்மி 16! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி, ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் இதுவரை இந்நிறுவனத்தின் வேறு எந்த தயாரிப்பிலும் இல... மேலும் பார்க்க

அதிரடியாக விலையுயர்ந்த ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்!

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் என்றழைக்கப்படும் எச்இவியின் விலையை அதிரடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமான செடான் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று ஹோண்டா சிட்டி. அவ்வப்போது ஹோண்டா சிட்டிய... மேலும் பார்க்க