டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆக முடிவு!
மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட லாபம் மற்றும் நேர்மறையான பொருளாதார தரவுகள் காரணமாக இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் இன்று அதிகபட்சமாக ரூ.85.05 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.52 ஐ தொட்ட நிலையில், முடிவில் 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26-ஆக முடிவடைந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 85.36ஆக நிலைத்தது.
இதையும் படிக்க: பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவு!