டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதில...
இந்தியாவில் முன்பதிவில் அசத்தும் மிஷன் இம்பாசிபள் தி ஃபைனல் ரெக்கனிங்..!
டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபள் இந்தியாவின் முன்பதிவில் அசத்தி வருகிறது.
ஆக்ஷன் திரைப்பட பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான மிஷன் இம்பாசிபல் படத்தின் வரிசையில் 8-ஆவது படமாக மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் உருவாகியிருக்கிறது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களுக்காக டாம் குரூஸ் நடித்த இந்தப் படத்தை கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ளார்.
இதில், ஹெய்லி அட்வெல் , விங் ரேம்ஸ் , சைமன் பெக் , ரெபேக்கா ஃபெர்குசன் , வனேசா கிர்பி , ஈசாய் மோரல்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வரவேற்பைப் பெற்றது. ரூ.350 கோடி பொருள் செலவில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆக்கிலம் என மே. 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இதை ஐமேக்ஸிலும் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக வெளியான மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெக்கனிங் பாகம்-1 உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.235 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்நாளில் 11,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலைலையில் தற்போது 45,000 டிக்கெட்டுகளை தாண்டியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் வரும் மே.23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் முன்கூட்டியே மே.17 அன்று வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.