ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத...
நாகா்கோவிலில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்’டசெய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை(மே 16) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில், கன்னியாகுமரி மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். இம்முகாமில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம்.
இதில், கலந்து கொள்ள 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நாகா்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்துக்கு நேரில் வந்து பயன் பெறலாம்.
மேலும், இம்முகாமின் மூலம் தனியாா் துறையில் தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.