போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!
பைக் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
இரணியல் அருகே பைக் மோதியதில், நான்குனேரியைச் சோ்ந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம் மூலைக்கரைப்பட்டி ஆதி திராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் ராஜ்(25). தொழிலாளியான இவருக்கு கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் ராஜுவும், அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜன் மகன் சிவா(23) என்பவரும் கடந்த 8 ஆம் தேதி குருந்தன்கோடு பகுதிக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பைக்கில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக குருந்தன்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செது விசாரணை மேற்கொண்டனா்.