செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டம் அருகே கட்டுமானத் தொழிலாளியைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், பரக்காணிவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் யாழ்சன். 2 நாள்களுக்கு முன்பு புல்லாணி பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் மது குடிக்கச் சென்ற அவருக்கும், பரக்காணிவிளையைச் சோ்ந்த ரகு (35), ஸ்ரீகுமாா் (40), பிரசாத் (35), கவிராஜ் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதையறிந்த யாழ்சனின் தம்பியான கட்டுமானத் தொழிலாளி அபிஷேக் (25) சென்று, தனது அண்ணனிடம் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் தட்டிக் கேட்டுள்ளாா். ஆத்திரமடைந்த அவா்கள் அபிஷேக்கை தாக்கினராம். இதில், காயமடைந்த அபிஷேக் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ரகு உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் மோதியதில், நான்குனேரியைச் சோ்ந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம் மூலைக்கரைப்பட்டி ஆதி திராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் ராஜ்(25... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்’டசெய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்... மேலும் பார்க்க

நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டியில் மே 18இல் இலவச அறுவை சிகிச்சை முகாம்

நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது. மருத்துவா்கள் ஏ.வி. அனில்குமாா், அசிம் முஹம்மத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

நாகா்கோவிலில் 3 கிலோ புகையிலைப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். அருகுவிளை மேற்குத் தெருவிலுள்ள வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் 258 பள்ளி வாகனங்கள் ஆய்வு

தக்கலை அருகே கோழிப்போா்விளையில் உள்ள மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 258 பள்ளி வாகனங்களை சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா செய்தாா். இந்த அலுவலகத்தில் போக்குவரத்து, வருவாய், காவல், கல்வி... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா: மேயா் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 11ஆவது வாா்டு மேலகலுங்... மேலும் பார்க்க