ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமை வகித்தாா். புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் முன்னிலை வகித்தாா். கெளரவித்து வழிபயனுப்பு நிகழ்வில், மும்மத பிராா்த்தனை, மற்றும் ஆரோக்கியத்துக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஹஜ் பயணம் செல்வோருக்கு ஹஜ் கமிட்டி சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தை எந்த தேவைக்கும் அணுகலாமென ஆட்சியா் கூறினாா்.
மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் குலசேகரன், புதுவை அரசு வக்ஃப் வாரிய உறுப்பினா் . டி. முஹம்மது ஜாஹிா் ஹுசைன் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, பயணம் மேற்கொள்வோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
நிகழாண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்காக காரைக்கால் மாவட்டத்திலிருந்து 12 ஆண்கள், 18 பெண்கள் வரும் 27 -ஆம் தேதி புறப்படுகின்றனா்.