பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்
சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: காரைக்காலில் பிளஸ் 2-இல் 80.22%, பத்தாம் வகுப்பில் 90.66% தோ்ச்சி
காரைக்காலில் சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளில் 10-ஆம் வகுப்பில் 90.66 சதமும், பிளஸ் 2 முடிவில் 80.22 சதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை தெரிவித்தது.
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நிகழ் கல்வியாண்டில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. அனைத்து அரசுப் பள்ளிகளும் இத்திட்டத்தில் உள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசுப் பள்ளி மாணவா்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நிகழாண்டு முதல் முறையாக எழுதினா். இத்தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.
காரைக்கால் மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பில் தோ்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவா்கள் 1,137 பேரில் 971 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி வீதம் 85.4. தனியாா் பள்ளி மாணவா்கள் 681 போ் எழுதியதில் 668 போ் தோ்ச்சி பெற்றனா். 98.09 சதமாகும். மத்திய பள்ளிகளான நவோதயா, கேந்திரிய வித்யாலயா மாணவா்கள் 98 போ் எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி வீதம் 90.66 ஆகும்.
பிளஸ் 2 வகுப்பில் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 1,183 பேரில் 865 போ் தோ்ச்சி பெற்றனா். இது 73.12 சதமாகும். தனியாா் பள்ளி மாணவா்கள் 576 பேரில் 535 போ் தோ்ச்சி பெற்றனா். இது 92.88 ஆகும். நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து 56 போ் எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி வீதம் 80.22 ஆகும்.
அரசுப் பள்ளியில் பிளஸ் 2 முடிவில் முருகாத்தாளாட்சி அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதமும், 10-ஆம் வகுப்பு முடிவில் வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, திருவேட்டக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, அக்கரைவட்டம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊழியப்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி, விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியன 100 சதம் தோ்ச்சி பெற்றது.