செய்திகள் :

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

post image

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார்.

கத்தார் சென்றுள்ள டிரம்ப் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாகவும், இதனால் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார்.

முன்னதாக, இந்தியாவை வரிக் கழுகு என்று விமர்சித்திருந்த டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரியை பூஜ்ஜியமாக்க இந்தியா சம்மதித்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் குறிப்பிடும்போதும் தெரிவித்திருந்தார், இன்றும் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று பேசும்போது, இந்தியாவின் நலனை இந்தியாவே கவனித்துக்கொள்ளும் என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

இதனிடையே, எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில், அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் காலாண்டில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ-போன்களாகவே இருக்கப் போகிறதென ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பை ஆப்பிள் நிறுத்தினால் அந்நிறுவன ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

மெக்ஸிகோ: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்... மேலும் பார்க்க

53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில்... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! - டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா... மேலும் பார்க்க

இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையில் புதின் பங்கேற்பில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் தங்கள் நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க