மத்திய அரசு மானியத்தொகையை விடுவிப்பதில்லை: அமைச்சா் பரமேஸ்வா்
மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது சரியல்ல என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை விடுவிக்குமாறு 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வலுயுறுத்தி வருகிறோம். ஆனால், மானியத்தொகையை விடுவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. ஒருசில நேரங்களில் மத்திய அரசின் மானியத்தொகையே வருவதில்லை.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா புதன்கிழமை ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினாா். மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு விடுவிக்கமால இருப்பது சரியல்ல, எனவே, மானியத்தொகையை விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்களை முதல்வா் சித்தராமையா கேட்டுக்கொண்டிருக்கிறாா்.
மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்கான ரூ.5,500 கோடி மானியத்தை விடுவிக்க வேண்டும். உரிய நேரத்தில் மானியத்தொகை விடுவிக்கப்பட்டால், அவை வளா்ச்சிப் பணிகளுக்கு பேரூதவியாக இருக்கும் என்றாா்.