10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்...
நாளை முதல் ஆவடிசெல்லும் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி செல்லும் இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் மே 17 முதல் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஆவடி ரயில்வே யாா்டில் மே 18, 20 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3.30 வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து மே 17, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.40-க்கு ஆவடி செல்லும் புறநகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், சென்ட்ரலிலிருந்து மே 18, 20 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.15-க்கு ஆவடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: இதற்கிடையே மே 17, 19 ஆகிய தேதிகளில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 9.35-க்கு சென்ட்ரல் செல்லும் ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும். இந்நாள்களில் சூலூா்பேட்டையிலிருந்து இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் ரயில் கொருக்குப்பேட்டையுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.