'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்கள்..
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
10-ம் வகுப்பு தேர்வு முடிகள் மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4,35,119 பேர், மாணவிகள் 4,36,120 பேர்.

இந்தத் தேர்வில் 8,17,261 (93.80 %) பேர் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர். இதில்,
மாணவிகள் 4,17,183 (95.88 %),
மாணவர்கள் 4,00,078 (91.74 %).
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.25% சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.26%.
அரசு உதவிப் பெரும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.63%.
தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.99%.
அதிக தேர்ச்சிப் பெற்ற மாவட்டகள் பட்டியலில்,
சிவகங்கை 98.31%,
விருதுநகர் 97.45%,
தூத்துக்குடி 96.76%,
கன்னியாகுமரி 96.66%,
திருச்சி 96.61%
ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய 12,290 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 11,409 (92.83%)பேர் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதிய 237 சிறை வாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் 23,769 பேரில் 9,616 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர்.