செய்திகள் :

Travel Contest : சிலிர்ப்பூட்டிய வீரர்களின் வீர நடை! : அட்டாரி-வாகா எல்லையில் அரங்கேறிய நிகழ்வு

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைப் பகுதியானா அட்டாரி-வாகா எல்லையில் தினசரி நடக்கும் 'பிட்டிங் ரிட்ரீட்' எனப்படும். பின்வாங்கு முரசறை சடங்கை ஒரு முறையாயினும் நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற நீண்ட நெடிய ஆசை ஒருவழியாக அண்மையில் நாங்கள் மேற்கொண்ட சுற்றுலா திட்டத்தில் நிறைவேறியது.

நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸும் இணைந்து நடத்தும் இந்த ராணுவ செயல் முறைக்கு தினசரி சுமார் 25,000 மக்கள் பார்வையாளர்களாக பங்கேற்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக நாங்கள் பஞ்சாபில் இறங்கியபோது எங்களுக்கு இந்த கொடி இறக்கும் முறை உண்டா இல்லையா என்று ஊர்ஜிதமாக தெரியவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பஹல்காமில் நடந்த துப்பாக்கி சூடும் சுற்றுலா பயணிகள் 28 பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் இதுபோன்ற தினசரி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 5 ம் தேதி மதிய உணவின் போது சுற்றுலா அழைத்து சென்ற பொறுப்பாளர்கள் அடுத்த நாம் போகப்போகும் இடம் அட்டாரி-வாகா எல்லை என்று சொன்னதும் ஹேய்ய்.. என்று சந்தோச சத்தம் .

சுமார் 4 மணி அளவில், அட்டாரியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பாதுகாப்பு வரிசை என்று சொல்லப்படும் 168 BN BSF வரவேற்பு பலகை நம்மை வரவேற்றது. நுழைவாயிலில் பல கட்ட பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டோம் .

ஆஹா இந்தியாவின் எல்லையில் கால் வைத்துவிட்டோம் என்ற உணர்ச்சி பூர்வமான எண்ணம் நம்மை என்னவோ செய்தது. ஓங்கி உயர்ந்த கம்பத்தில் நம் மூவர்ண கொடி நம்மை வரவேற்றது . கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுத்துக்கொண்டே இருந்தார்கள் .

நாங்கள் தமிழில் பேசிக்கொண்டு சென்றதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் , என்ன ஸ்கூல் லீவ் விட்டதும் எல்லோரும் கிளம்பி வந்துட்டிங்களா ? என உற்சாகமாக தமிழில் விசாரித்தார் .

அவருடன் பேசியதில் , தென்காசியை சேர்ந்த திவாகர் என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கே பணி புரிவதாகவும் சொன்னார் . அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சல்யூட் அடித்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் (PR) 1959 முதல் வாகா-அட்டாரி எல்லையில் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் கொடிகளைத் தாழ்த்தும் சடங்கு. மாலையில் எல்லையை முறையாக மூடிவிட்டு இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் அகற்றுவதற்காக இந்த விழா அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு, கொடி இறக்கும் விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தேசபக்தி நிகழ்ச்சியாகக் காட்டப்படுகிறது.இது இரு நாடுகளின் போட்டி மற்றும் அவர்களின் சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாகும்.

இந்த நிகழ்வு இரு தரப்பு வீரர்களின் உற்சாகமான அணிவகுப்புடன் தொடங்கி, இரு நாடுகளின் கொடிகளும் குறைபாடற்ற முறையில் ஒத்திசைந்து இறக்கப்படுவதோடு முடிவடைகிறது.

பின்வாங்கலின் போது எல்லை ஒரு போர்க்களம் போல் தெரிகிறது, ஏனெனில் துருப்புக்கள் ஆர்வத்துடனும், கடுமையான கால் மிதிப்புடனும் அணிவகுப்பை வழிநடத்துகிறார்கள்."கூஸ் அணிவகுப்பு" வகையான அணிவகுப்பில் வீரர்கள் தங்கள் கால்களை மிக உயரமாக உயர்த்தும்போது நமக்கு மெய் சிலிர்ப்பூட்டுகிறது.

இந்த நிகழ்வில் சில வேடிக்கையான செயல்கள் இடம்பெறுகின்றன,கொடிகள் கவனமாக மடித்து, நிகழ்வுக்குப் பிறகு சேமித்து வைப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.

நாங்கள் சென்றபோதும் இடைவெளியில்லாமல் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. நாங்கள் போய் அமர்ந்த சில நிமிடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உற்சாகமாக கத்திகொண்டே துள்ளலான அவரின் உடல் மொழியால் அபரிமிதமான உற்சாகப்படுத்தலாலும் மொத்த கூட்டத்தையும் சுமார் ஒண்ணரை மணி நேரம் கட்டி ஆண்டார் . யப்பா .. என்னவொரு உற்சாகம் அந்த வீரரிடம் என்று மொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது .

அட்டாரி-வாகா எல்லை

வந்தவர்களில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்களும் பெண்களுமாக சுமார் 20 பேர் அந்த வீரரின் வழிகாட்டுதல்படி நமது மூவர்ண கொடியை ஏந்தி எல்லையை தொட்டுவிட்டு வர, கூடி இருந்த கூட்டம் எழுப்பிய சத்தத்தில் அருகில் இருந்த பாகிஸ்தான் எல்லையில் கண்டிப்பாக அதிர்வு ஏற்பட்டிருக்கும் .

கொடி அணிவகுப்பு முடிந்தவுடன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாதுகாப்பு படை வீரர் மைக்கில் என்ன சொன்னார் என்று தெரியவில்லை .. பார்வையாளர்களாக வந்திருந்த மொத்த பெண்களும் கீழே இறங்கினார்கள் .. பக்கத்தில் இருந்தவர்களை கேட்டதற்கு , டான்ஸ் ஆட அழைப்பதாக சொன்னார்கள்.

உடன் வந்த அத்தனை அம்மாக்களையும் ஆன்டிகளையும் இறக்கி விட்டோம் .. சுமார் 20 நிமிடங்களுக்கு எங்கிருந்துதான் வந்ததோ அந்த எனர்ஜி .. ஒலிபரப்பப்பட்ட இந்தி பாடலுக்கு அப்படியொரு துள்ளலாட்டம். இந்தி புரிந்ததோ இல்லையோ .. இந்திய எல்லையில் ஆட்டம் போட்ட மகிழ்ச்சி அத்தனை பேர் முகத்திலும் தெரிந்தது .

அடுத்து நமது எல்லை பாதுகாப்பு படையின் , பெண் வீரர்கள் மட்டுமே நிகழ்த்திய அணிவகுப்பும் , துப்பாக்கிகளை வைத்து அவர்கள் லாவகமாக செய்த சாகசங்களும் பலத்த கைதட்டலை பெற்றது.

தொடர்ந்து நமது தேசியக்கொடியையும் , எல்லை பாதுகாப்பு படையின் கொடியையும் வீரர்கள் ஏந்தி அணிவகுப்பாக வர .. ஒவ்வொரு வினாடியும் விசிலும் கைத்தட்டலுமாக அரங்கம் அதிர்ந்தது .

இரண்டு பெண் வீரர்கள் அணிவகுப்பை முன்னெடுத்த செல்ல பின் தொடர்ந்த மற்ற பத்து வீரர்களும் போட்ட நடையை பார்த்து துவண்டு இருப்பவர்களை கூட துள்ளி எழ வைத்துவிட்டது .விதவிதமான வீர நடையுடன் , கால்களை தலைக்கு மேலே வரை தூக்கி அவர்கள் செய்யும் வணக்கம் மெய்சிலிர்க்க வைத்தது.

இறுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் கொடிகள் அந்தந்த நாட்டு வீரர்களின் மரியாதையுடன் ஒரு சேர இறக்கப்பட மொத்த கூட்டமும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தியது.

இறக்கப்பட்ட கொடி அணிவகுப்பு மரியாதையுடன் கொண்டு செல்லப்படும்வரை கலையாமல் இருந்த கூட்டம் பிறகு எல்லையில் கால் வைக்கவும் வீரர்களுடன் புகைப்படம் எடுக்கவும் போட்டி போட்டுகொண்டு இறங்கி ஓடியது.

ஓடி ஓடி புகைப்படம் எடுக்கும் படலம் முடிந்து எல்லையை தொட்டு வணங்கி வெளியில் வந்து மீண்டும் நம்மூர் திவாகரிடம் சொல்லி விடை பெற்ற நம்மை இந்தியாவின் முதல் மற்றும் கடைசி உணவகம் வழியனுப்பிவைத்தது .

சுமார் ஒண்ணரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்வில், நிகழச்சியை ஒருங்கிணைத்த வீரரின் உற்சாகமான உடல் மொழி அனைவரையும் கவர்ந்தது . நம் எல்லையில் இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் இதே வேளையில் பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலும் சொற்ப பார்வையாளர்களுடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை சற்று தொலைவில் இருந்து காண முடிந்தது .

இந்தியனாக பிறந்த நாம் வாழ்வின் இறுதிக்குள் ஒரு முறையாயினும் நம் எல்லையில் நடக்கும் இந்த நடைமுறையை கண்டிப்பாக நேரில் காணவேண்டும்.

மாலை 7 மணியாகியும் இருள் கவ்வாமல் மேற்கில் சூரியன் பொன்னிறமாக ஜொலித்துக்கொண்டு இருந்ததை கண்டு ஆச்சர்யம் அகலாமல் நம் எல்லையில் இருந்து விடைபெற்றோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

இமயத்தின் ஓர் அழகான ஆபத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் முதல் நாள்! - திசையெல்லாம் பனி - 1 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எங்க போனாலும் கப்பலில்தான் போகணும்! - நீரோடும் நகர் கொடுத்த ஜில் அனுபவம்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : பனி படர்ந்த இடத்தில் மழையில் நனைந்தவாறே விளையாட்டு! - கோக்சர் கொடுத்த பரவச அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இத்தாலி டு சுவிஸ் ஒரு ஜில் கார் பயணம்! - அனுபவப் பகிர்வு |My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

லேசான சாரல் மழையும் இதமான குளிர்காற்றும்! - நெல்லியம்பதி பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

America: இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம்! காரணம் தெரியுமா?

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவின் ஒரு நகரத்தில், பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதற்காக இந்த விதி உள்ளது என்பது குறித்து தெரி... மேலும் பார்க்க