பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ...
America: இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம்! காரணம் தெரியுமா?
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவின் ஒரு நகரத்தில், பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதற்காக இந்த விதி உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஜோரி என்ற பயண வலைப்பதிவர், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜோரி கூற்றுப்படி, கலிபோர்னியாவின் கார்மேல்-பை-தி-சீக் கடற்கரை நகரத்தில் பெண்கள் அனுமதி இல்லாமல் ஹை ஹீல்ஸ் அணிவது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற அங்கு இடம் உள்ளது. அவர்களிடமிருந்து முறையாக அனுமதி பெற்று ஹை ஹீல்ஸை அணிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
அனுமதி பெற இங்கு விண்ணப்பிப்பது முற்றிலும் இலவசம், மற்றும் எளிதானது என்று கூறியுள்ளார் கோரி
அனுமதி கிடைத்தாலும் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகள் அங்கு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எதற்காக இந்த விதி?
அந்த நகரத்தின் நடைபாதைகள் மரங்களின் வேர்களாலும் கடினமாகவும் இருப்பதால் இது போன்ற விதிகளை விதித்துள்ளனர்.
இந்த நடைபாதையில் ஹை ஹீல்ஸ், ஷூ அணிந்தவர்கள் தடுமாறி விழுவதால் பல விபத்துகளைப் பயணிகள் அனுபவித்துள்ளனர்.
இதனைத் தடுக்கும் விதமாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் 1963ஆம் ஆண்டு இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...