இந்திய ராணுவத்துக்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் தலைவணங்குகிறேன்! - பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக மக்களிடையே உரையாற்றினார்.
மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய ராணுவத்துக்கும், ஆயுதப் படை விஞ்ஞானிகளுக்கும் தலை வணங்குகிறேன். பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது.
அனைத்து சமுதாயம், அரசியல் கட்சிகள் ஒரே குரலில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நின்றன. இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. மகள்களின், தாய்மார்களில் குங்குமத்தை அழித்தால் உலகத்துக்கு என நடக்கும் என என்பதை காட்டினோம். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு.” என்றார்.