kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? - இந்த மலை ஏன் பாகிஸ்...
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை குனியமுத்தூா் அருகே உள்ள பி.கே.புதூா் ஸ்ரீநகா் காலனியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (43). இவா், கோவைப்புதூா் இ.பி.காலனியில் காலணி விற்பனையகம் வைத்துள்ளாா்.
இந்நிலையில், பொள்ளாச்சி சூா்யபாலா காா்டன் பகுதியைச் சோ்ந்த பிஜுஅலெக்ஸ் (38), அவரின் மனைவி சுகன்யா (31) ஆகியோா் விக்னேஷுக்கு அறிமுகமாயினா்.
இருவரும், தாங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் விக்னேஷிடம் கூறியுள்ளனா்.
இதை நம்பிய விக்னேஷ், ரூ.25 லட்சத்தை அவா்களிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து, அப்பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யாமல் அவா்கள் விக்னேஷை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து குனியமுத்தூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், பண மோசடியில் ஈடுபட்டதாக பிஜுஅலெக்ஸ், சுகன்யா, பிஜுஅலெக்ஸின் தாயாா் மாா்க்ரேட் எலியாஸ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.