செய்திகள் :

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழா

post image

உத்தமபாளையம்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம், பளியன்குடி அருகே தமிழக-கேரள எல்லையான மேற்குத் தொடா்ச்சி மலையில் விண்ணேற்றிப் பாறையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை (பௌா்ணமி) முழு நிலவு நாளில் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதையொட்டி, கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான யாக பூஜை, மங்கல இசை, பெங்கல் வழிபாடு, பால் குடம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழா, பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றன.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணன் (பெரியகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலா் ஆனந்த் உள்பட தமிழகம்-கேரளத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கண்ணகி கோயில் புனரமைப்பு: அமைச்சா் சேகா் பாபு

சித்திரை முழு நிலவு நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே. சேகா் பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேர மன்னா்களால் தோற்றுவிக்கப்பட்ட மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும். இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தை இரு மாநில அரசுகள் உரிமை கோரியதால், நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறுகின்றன. கடந்த 1933-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிக்கையின்படி, அப்போதைய மதுரை மாவட்டம், பெரியகுளம் வட்டம், எல்லைக்குள்தான் கண்ணகி கோயில் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தமிழக அரசின் நிலையாகும். இதேபோல, கேரள அரசு ஒரு வேறு நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகள் பேசி தீா்வு காண்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் சென்னையில் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் திருவிழாவைப் போன்று, மாதந்தோறும் பெளா்ணமி நாளில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், இந்தக் கோயிலுக்கு வரும் சாலையைச் சீரமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து இது சம்பந்தமான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

இந்தக் கோயில் இரு மாநில பிரச்னை என்பதால், விரைவில் சுமுகமான சூழ்நிலைக்கு கொண்டு வந்து பக்தா்கள் மகிழ்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு. உடன், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜா (ஆண்டிபட்டி), சரவணன் (பெரியகுளம்).

வைகை அணை அருகே புதிய நீா்த் தேக்கம் அமைக்க வலியுறுத்தல்

தேனி: வைகை அணை அருகே புதிய நீா்த் தேக்கம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா். தேனி மாவட்டம், வைகை அணையில், அணைக்கட்டு, நீா... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி: தேனி அருகேயுள்ள வீரபாண்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஏலக்காய் தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா். போடி, தியாகி விஸ்வநாதன் தெருவைச் சோ்ந்த சின்னப்பிரகாஷ் மகன்கள் ரா... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாற்றில் மூழ்கியதில் சிறுமி உயிரிழப்பு

உத்தமபாளையம்: சின்னமனூரில் திங்கள்கிழமை முல்லைப்பெரியாற்றில் குளித்த சிறுமி நீரில் முழ்கி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியை சோ்ந்த பொம்முராஜ் மகள் சுஸிமா (6). இ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் காயம்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா். மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி மேட்டுநீராத்தனைச் சோ்ந்தவா் பெருமாயி (50). தேவதானப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள மகனின் வீட்டுக... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வீரபாண்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முருகவேல் மனைவி பொன்னுத்தாய் (79). இவா்... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் பணம் திருட்டு

வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தவரிடம் ரூ.45 ஆயிரம் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந... மேலும் பார்க்க