செய்திகள் :

Kohli: வெறும் 770 ரன்களில் தனது லட்சியத்தை பாதியில் விட்டுச் சென்ற கோலி - 2013ல் கூறியது என்ன?

post image

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார்.

ஏற்கெனவே, 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கோலி, அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.

Virat Kohli
Virat Kohli

கிரிக்கெட்டின் மிக நீண்ட ஃபார்மட்டான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையில் இதுவரை யாரும் செய்திராத, குறிப்பாக வேகப்பந்துவீச்சு யூனிட்டில் புது வேகத்தைப் பாய்ச்சிய கோலிக்கு, சச்சின் போன்ற ஜாம்பவான்கள் முதல் வில்லியம்சன் போன்ற சமகால சிறந்த பேட்ஸ்மேன்கள் வரை பலரும், அவரின் அடுத்தகட்ட பயணத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், வெற்றியோ தோல்வியோ எந்த நொடியிலும் விட்டுக்கொடுக்காமல் போராடும் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கனவை வெறும் 770 ரன்களில் பாதியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்.

சாதனைகளை ஒருபோதும் பார்ப்பதில்லை:

2013-ல் `சீதி பாத் (Seedhi Baat)' என்ற ஒரு நேர்காணலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது லட்சியம் குறித்து பேசிய கோலி, "சாதனைகளை ஒருபோதும் நான் பார்ப்பதில்லை.

ஒரு போட்டியில் நான் சதமடித்த பிறகுதான், அதிவேகமாக 10 சதங்களை எட்டியது என்பதைத் தெரிந்துகொள்கிறேன். எனவே போட்டிக்குப் பிறகுதான் அதைப் பற்றி எனக்குத் தெரியும்.

எனக்கு இன்னும் ஐந்து இன்னிங்ஸ் இருக்கிறது, இன்னும் 3 சதங்கள் அடித்தால் ஒரு சாதனை படைப்பேன் என போட்டிக்கு முன்பு எதையும் நினைக்க மாட்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுப்பதே எனது குறிக்கோள், அதைத்தான் நான் உண்மையில் அடைய விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

விராட் கோலி

இந்த நிலையில், 123 போட்டிகளில் 210 இன்னிங்ஸ்களில் 30 சதங்கள், 31 அரைசதங்கள் என 46 ஆவரேஜுடன் 9,230 ரன்கள் குவித்திருக்கும் கோலி, 770 ரன்களில் 10,000 ரன்கள் என்ற இலக்கை பாதியிலேயே விட்டுவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சச்சின் (15,921), டிராவிட் (13,288), கவாஸ்கர் (10,122) ஆகியோரே 10,000 ரன்கள் என்ற மைல் கல்லைக் கடந்தவர்களாகவும் இருக்கின்றனர். நான்காவது இடத்தில் 9,230 ரன்களுடன் கோலி இருக்கிறார்.

இருப்பினும், ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 51 சதங்களுடன் கோலியே முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாகப் பேசிய கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.ஏற்கெனவே, 2024 உலகக் கோப்பையை வென்றபோது... மேலும் பார்க்க

Virat Kohli : `காட்டையே அள்ளி உண்ணும் மிருகம்!' - விராட் கோலி ஏன் 'GOAT' தெரியுமா?

'தீரா பசி கொண்ட மிருகம்!'ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. எதிர்பார்த்திடாத முடிவு இது. விராட் கோலி எதிலும் திருப்திப்பட்டுக் கொள்பவர் அல்ல. அவருக்கு எல்லாமே இன்னும் இன்னும் தேவைப்பட்டுக் கொண்டே ... மேலும் பார்க்க

Kohli: ``இங்கிலாந்தில் பார்ப்போம் என்று நினைத்தோம், ஆனால்..'' - கோலி ஓய்வு குறித்து பயிற்சியாளர்

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி நேற்று (மே 12) அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக... மேலும் பார்க்க

Virat Kohli: `30 சதங்கள், வெற்றிகரமான கேப்டன்சி' - டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் சாதித்தது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. அவரது கெரியரில் 123 டெஸ்... மேலும் பார்க்க

பும்ரா, கில், பன்ட்... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அன்றே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் ரோஹித். அந்த சமயத்தில் இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாதான் இயல்பாகவ... மேலும் பார்க்க

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? - வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.அதோடு, ஐ.பி.எல்... மேலும் பார்க்க