செய்திகள் :

பும்ரா, கில், பன்ட்... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

post image

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அன்றே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் ரோஹித். அந்த சமயத்தில் இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாதான் இயல்பாகவே இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த வேளையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரோஹித் சர்மா - AUS v IND

இத்தகைய சூழலில், மே 7-ம் தேதி ரோஹித் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதனால், இந்தியா டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதில், ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் துணைக்கேப்டனாகவும், ரோஹித் ஆடாதபோது கேப்டனாகவும் செயல்பட்ட பும்ராவை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.

யார் கேப்டன்?

இருப்பினும், பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசி போட்டியில் காயம் ஏற்பட்டதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரையே தவறவிட்டார் பும்ரா. இப்படியிருக்க, ஜூனில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்டது என்பதால் அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ராவை காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். எனவே, பும்ராவுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுக்காமல் வேறு யாரேனும் கேப்டன் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தவிர விரைவில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய சீசன் தொடங்கும். இரண்டாண்டுகள் நீடிக்கும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் முழுமைக்கும், ஒரே கேப்டன் இருக்க அணி நிர்வாகம் விரும்பும். இதுவும் பும்ராவை கேப்டனாக நியமிக்க சிக்கலாக அமையலாம்.

BGT 2024-25 - பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா
BGT 2024-25 - பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா

அந்தப் பட்டியலில் சுப்மன் கில், ரிஷப் பன்ட், கே.எல். ராகுல் ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது. இவர்கள் மூவருமே கடைசியாக இந்தியா விளையாடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தனர். அந்தத் தொடரில் இவர்கள் மூவரில் ஒருவர் கூட 300 ரன்கள் அடிக்கவில்லை. கே.எல். ராகுல் 276 ரன்களும் (2 அரைசதம்), ரிஷப் பண்ட் 255 ரன்களும் (1 அரைசதம்), சுப்மன் கில் 93 ரன்களும் அடித்திருந்தனர். இருப்பினும், நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. கே.எல். ராகுலின் பேட்டிங் ஓரளவு பரவாயில்லை என்று இருக்கிறது.

சுப்மன் கில்
சுப்மன் கில்

அதேசமயம், சுப்மன் கில் குஜராத் அணியில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியிலுமே கூட இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்ட கில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனால், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

பிசிசிஐ என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Virat Kohli: `30 சதங்கள், வெற்றிகரமான கேப்டன்சி' - டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் சாதித்தது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. அவரது கெரியரில் 123 டெஸ்... மேலும் பார்க்க

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? - வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.அதோடு, ஐ.பி.எல்... மேலும் பார்க்க

"ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" - கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

IPL 2025: ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குமா? - ஐபிஎல் தலைவர் அருண் துமல் விளக்கம்

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்ப... மேலும் பார்க்க

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்'ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

IPL: `பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது’ - ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ... மேலும் பார்க்க