IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(33). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நாகராஜன் வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொள்ளும் முன்பு நாகராஜன் அவரது தந்தைக்கு உருக்கமாகச் சில ஆடியோ பதிவுகளை அனுப்பியுள்ளார்.

அதில் நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் சாதி அடிப்படையில் டார்ச்சர் செய்து வருவதாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டி அதிக பணிச்சுமை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார்.
நாகராஜன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததாகவும், ஆனால் நேற்று வீட்டு வேலைக்காக உடனடியாக வரவேண்டும் என அந்த அதிகாரி அழைத்ததாகவும், உடனடியாக வராமல் இருந்தால் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் நாகராஜனின் மனைவி உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது பற்றி நாகராஜனின் தந்தை ரவி கூறுகையில். "எனக்கு 2 மகன்கள். மூத்தவன் மார்பிள் வேலை செய்துவருகிறான்.
இரண்டாவது மகன் நாகராஜன். துப்புரவுப் பணியாளராக இருந்த நாகராஜன் தேர்வு எழுதி கோர்ட்டில் அலுவலக உதவியாளராகச் சுமார் 9 மாதம் முன்பு பணியில் சேர்ந்தார்.
நாகர்கோவில் கோர்ட்டில் நல்லபடியாக வேலை செய்துகொண்டிருந்தார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் குழித்துறை கோர்ட்டில் இடமாற்றம் செய்தார்கள்.
அங்குள்ள அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் வேலை செய்யும்படி என் மகனை வலியுறுத்தி டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.
மரங்களில் ஏறி மாங்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பறிக்கச் சொல்லியிருக்கிறார். மறுத்துப் பேசினால் சாதியைச் சொல்லி உங்களுக்கெல்லாம் யார் வேலை கொடுத்தார்கள் எனத் திட்டியுள்ளனர். பலா மரம் ஏறத்தெரியாதா எனக் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை லீவு எடுத்துள்ளான். ஆனால், ஐயா வீட்டுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு போக வேண்டும் எனப் பெண் ஊழியர் ஒருவர் என் மகனிடம் தெரிவித்திருக்கிறார்.
வண்டி பஞ்சராகி உள்ளதால் இப்போது போக முடியாது எனக் கூறியிருக்கிறான் என் மகன். அதற்கு, வராமல் இருந்தால் திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்துவிடுவதாக அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் யாரும் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை. ஆனால், அந்த அதிகாரி சாதி பார்த்தது தவறானது. அந்த அதிகாரி நிறையத் தரக்குறைவாக நடந்துள்ளார். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை என் மகனின் உடலை வாங்கமாட்டோம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb