அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்
ஆஸி. பந்துவீச்சாளர்களும்.. வான் பாதுகாப்பு அமைப்பும்..! லெஃப்டினன்ட் ஜெனரல் புகழாரம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று (மே 12) பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.
அவருடன் விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகியோருடம் சேர்ந்து விளக்கமளித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதத் தன்மையே மாறியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீதும், ஆன்மிக சுற்றுலா சென்றோர் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதே அதற்கு உதாரணமாக இருக்கிறது.
இதையும் படிக்க: பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் வரும் என்பதால் அதற்கேற்ப வான் பாதுகாப்பு அமைப்பு தயார் நிலையில் இருந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் போது, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஜெஃப் தாம்சன் மற்றும் டென்னிஸ் லில்லி இருவரும் இணைந்து இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை தகர்த்து துவம்சம் செய்தனர்.
அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் 'from ashes to ashes and from dust to dust' என்று அவர்கள் ஒரு பழமொழியை உருவாக்கினர். இதற்கு தாம்சன் உங்களை வீழ்த்தவில்லை என்றால் டென்னிஸ் லில்லி உங்களை கட்டாயம் வீழ்த்துவார்' என்று தெரிவித்தனர்.
இதேபோலதான், இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒன்று தாக்குதலைத் தடுக்கத் தவறினால், மற்றொன்று அதனை தாக்கி அழிக்கும். இந்திய வான் பாதுகாப்பு அடுக்குகளை நீங்கள் கூர்மையாக கவனித்தால் நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும்.
எல்லா அடுக்குகளையும் சமாளித்து நீங்கள் கடந்து செல்ல முடிந்தாலும், ஏதாவது ஒன்று உங்களை தடுத்துக் கொள்ளும்” என்று இந்திய வான் பாதுகாப்பு அமைப்பை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு சூசகமாக விளக்கம் அளித்தார் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி.
இதையும் படிக்க:ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!
#WATCH | Delhi | DGMO Lieutenant General Rajiv Ghai says, "Targetting our airfields and logistics is way too tough... I saw that Virat Kohli has just retired from test cricket; he is one of my favourites. In the 1970s, during the Ashes between Australia and England, two… pic.twitter.com/B3egs6IeOA
— ANI (@ANI) May 12, 2025