தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற மே 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேச அணி வீரர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறோம். வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் குறித்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக, வங்கதேச அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.