ஆஸி. பந்துவீச்சாளர்களும்.. வான் பாதுகாப்பு அமைப்பும்..! லெஃப்டினன்ட் ஜெனரல் பு...
சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு கள்ளழகரை வழிபட்டனர். மேலும், நேர்த்திக்கடனாக பக்தர்கள் கருப்புசாமி வேடமிட்டு அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது.
மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் யாரும் சங்கட்டப்படாத அளவுக்கு சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டம் உங்களுக்கே தெரியும் பாலம். பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு சாலையை புதுப்பித்துள்ளோம். உயிரிழப்பு குறித்து துறைச் சார்ந்து கேட்டறிந்து விளக்கம் அளிப்போம். மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது, அதை கொண்டாடுவோம். அப்படி ஏதும் உயிரிழப்பு ஏற்பட்டால் நிவாரணம் தரப்படும் என்றார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் பலியானார்.