செய்திகள் :

"தமிழ் சினிமா பாடல்களில் ஆங்கிலம்தான் அதிகம் இருக்கிறது; முன்பெல்லாம்..." - அனுராக் காஷ்யப் வேதனை

post image

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.

சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார்.

அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருபவர்.

தற்போது தமிழ்ப் பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவிட்டதாகவும், அர்த்தமற்றதாக மாறிவிட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

இது குறித்துப் பேசியிருக்கும் அனுராக், "தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் 'PAN-India' திரைப்படங்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிட்டன.

இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்களில் அதிகம் ஆங்கிலமே இருக்கின்றன. தமிழ் குறைவாகத்தான் இருக்கிறது.

ஒரு வெளிநாட்டு ராக் இசைக்குழு போல, தமிழ் சினிமா பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவருகின்றன. இவை தமிழ்ப் பாடல்களே இல்லை.

இளையராஜா
இளையராஜா

தமிழ்ப் பாட்டில் தமிழையே கேட்க முடிவதில்லை. முன்பெல்லாம் இளையராஜா மற்றும் பலரின் பாடல்களைத் தமிழிலிருந்து இந்திக்குக் கேட்டு வாங்கும் ஒரு காலம் இருந்தது.

இப்போது தமிழ்ப் பாடல்கள் எனக்கு அர்த்தமற்றதாக மாறி வருகின்றன" என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Anurag Kashyap: "பான் இந்தியா படம் என்ற பெயரில் பெரிய ஊழல் நடக்குது" - கொதிக்கும் அனுராக் காஷ்யப்

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக போரை நிறுத்திய ஆப்கானிஸ்தான் அதிபர் மகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இப்போது போர்பதட்டம் நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு ஒன்றுக்காக உள்நாட்டு போர் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்போது நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. பாகி... மேலும் பார்க்க

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த வாசகம் இந்தியா முழுவதும் தேசபக்திக்கான அடையாளமாக மாறியிருக்கிறது.அதனால் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் வார்த்... மேலும் பார்க்க

Operation Sindoor பெயரில் திரைப்பட அறிவிப்பு; கிளம்பிய எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறும் இந்தியா, பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்கு... மேலும் பார்க்க

`ஒரே நேரத்தில் 18 பாட்டில் குடிப்பேன்; ஒரே நாளில் நிறுத்தியது எப்படி?’ - பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்

பழம்பெரும் பாலிவுட் கதாசிரியர் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை ஷபானா ஆஸ்மியை திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழில் வைரமுத்துவின் பாடல்கள் போன்று இந்தியியில் ஜாவேத் அக்தரின் பாடல்கள் மிகப் பிர... மேலும் பார்க்க

Deepika Padukone: மகளுக்கு `துவா' எனப் பெயர் வைத்தது ஏன்? - தீபிகா பகிர்ந்த சுவாரஸ்யம்!

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துவா (Dua) எனப் பெயர் சூட்டியுள்ளனர்.Deepika Padukone - Ranveer Singhசமீபத்தில் தீ... மேலும் பார்க்க