இந்தியா - பாக். ராணுவ தலைமை அதிகாரிகள் பேச்சு முடிவடைந்தது!
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் தரப்புக்கு கடும் எச்சரிக்கையை இந்தியா விடுத்திருக்கும் என்றே தகவலறிந்த ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி தாக்கினால் கடுமையான எதிர்வினையாற்றப்படும் என்பதை ஆனித்தரமாக ராணுவம் எச்சரித்திருக்கும் என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.