செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி... கொரட்டி பகுதியில் மின்னழுத்த சோதனை

post image

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் மின்னழுத்த குறைபாடு உள்ளதாக செய்தி வெளியானதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மின்னழுத்தத்தை சோதனை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக சீரான மின் விநியோகம் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதாக ஞாயிற்றுக்கிழமை தினமணியில் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் கொரட்டி, குமாரம்பட்டி, எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி, தண்டுக்கானுா் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று மின்னழுத்த குறைபாடு குறித்து சோதனை மேற்கொண்டனா்.

மேலும், கொரட்டி துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பழுது சரி செய்யப்பட்டு வருவதாகவும், பழுது சீரடைந்த பிறகு மின் விநியோகம் சீராகும் எனவும் தெரிவித்தனா்.

புதூா் நாடு மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி: குறைதீா் கூட்டத்தில் மனு

புதூா்நாடு அருகே மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி கோரி குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்ல... மேலும் பார்க்க

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

குடியாத்தம் அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டாா். குடியாத்தம் அடுத்த புதுப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டனின் மனைவி மணி சுதா (28) இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்... மேலும் பார்க்க

கட்டட பொறியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் மாவட்ட அனைத்து கட்டட பொறியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் விஜயபானு தலைமை வகித்தாா். செயலாளா் மோகன் மற்றும் பொருளாளா் குமரேசன் ஆகி... மேலும் பார்க்க

சீரான குடிநீா் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

திருப்பத்தூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட குடியரசு நகா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு ஆம்பூரில் வரவேற்பு

ஆம்பூருக்கு வருகை தந்த மத்திய இணை எல். முருகனுக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தணிந்தது என அமெரிக்கா அறிவிப்பு: மத்திய அரசு விளக்க வேண்டும்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது என அமெரிக்கா ஏன் அறிவித்தது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன் பேசினாா். இந்திய கம்யூனிஸ்டு கட்சி... மேலும் பார்க்க