செய்திகள் :

கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்கள்!

post image

கோடைக்காலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது தர்ப்பூசணியும்(watermelon) , முலாம் பழமும்(muskmelon) தான். தர்பூசணி, முலாம்பழம் போன்றே கொடுக்காய்ப்புளியும் கோடை சீசனீல் ரொம்பவும் ஃபேமஸ் ஆன ஒன்று. கோடையில் தான் இந்த காய்கள் காய்க்கும் சீசனும் கூட. மற்ற நேரங்களில் இவற்றை பார்க்க முடியாது. சென்னைப் போன்ற வட தமிழக பகுதிகளில் இதற்க்கு கொரிக்கலிக்காய் என்ற வேறொரு பெயரும் உண்டு.

கொடுக்காய்ப்புளி
கொடுக்காய்ப்புளி

நகர்ப்புற வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுக்காய்ப்புளியை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றளவும் கிராமப்புறங்களில் கொடுக்காய்ப்புளிக்கு மவுசு அதிகம். பழத்திற்கு‌ பாதுகாப்பாய் வேலி அமைத்ததுபோல மரத்தின் கிளைகள் முழுவதும் முற்கள் படர்ந்திருக்கும். இதன் முற்றிய காய்கள் பச்சை நிறத்திலும் சாப்பிடுவதற்கு துவர்ப்பு சுவையிலும், பழம் அடர் சிவப்பு நிறத்திலும் சாப்பிடுவதற்கு இனிப்பு கலந்த‌ துவர்ப்பு சுவையுடனும் இருக்கும்.

மனிதன் எதையும் போகிற போக்கில் உண்ண பழகவில்லை. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் மறைந்திருக்கும். அப்படி இந்த கொடுக்காய்ப்புளியை உண்பதால் என்ன மருத்துவகுணம் உள்ளது என்பதை விளக்குகிறார் அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

"மனிதர்கள் பெரும்பாலும் இனிப்பு, காரம் போன்ற சுவைகளையே பெரிதும் விரும்புகின்றனர். துவர்ப்பு சுவையை யாரும் பெரிதும் விரும்புவதில்லை. கொடுக்காய்ப்புளி துவர்ப்பு சுவை மிகுந்த உணவுப்பொருள்களில் ஒன்று. இப்படி ஒரு பழம் இருப்பதுகூட பலருக்கு தெரிவதில்லை.

கொடுக்காய்ப்புளி
கொடுக்காய்ப்புளி

இந்த கொடுக்காய்ப்புளியில் துவர்ப்பு சுவை நிறைந்து இருப்பதால் இவற்றை சாப்பிடும் போது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும். தற்போது உள்ள உணவியல் முறையால் ஏற்படக்கூடிய அல்சர் மற்றும் செரிமான மண்டலங்களில் ஏற்படக்கூடிய சிராய்வுகள் போன்றவற்றையும் சரிசெய்யும் பண்பு இந்த கொடுக்காய்ப்புளிக்கு உள்ளது. கொடுக்காய்ப்புளியை பழமாக உண்பதைவிட பிஞ்சாக இருக்கும்போது உண்டால் நல்லது. அப்போது அதில் அதிகளவு துவர்ப்பு சுவை இருக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் பழங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த கொடுக்காய்ப்புளியில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கை, கால் வீக்கம், புண் போன்றவற்றையும் இவை குணப்படுத்தும்.

மருத்துவர் வி.விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்

கொடுக்காய்ப்புளியை சாப்பிடும் போது தொண்டை அடைப்பது போன்று இருக்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவற்றை இடித்து பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொடுக்கலாம்'' என்கிறார் மருத்துவர் வி.விக்ரம்குமார்.

-ர.ராஜ்குமார்

ஜெர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் கொக்கைன் பயன்படுத்தினார்களா? - உண்மை என்ன?

உக்ரைனுக்கு ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் ரயிலில் பயணம் சென்றபோது கோகோயின் எடுத்துக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள... மேலும் பார்க்க

Doctor Vikatan: `2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டும் குணமாகாத வாய்ப்புண்..' - காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் உறவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்புண் இருக்கிறது. எல்லாவிதமான மெடிக்கல் செக்கப்பும் செய்து பார்த்துவிட்டார். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் ... மேலும் பார்க்க

Ceasefire: நேற்றிரவு காஷ்மீர் வானில் பறந்த ட்ரோன்கள்; பதட்டத்தில் மக்கள்.. ராணுவம் சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் (Ceasefire) உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு காஷ்மீரில் ஜம்மு, சம்பா, அக்னூர் மற்றும் கதுவா உள்ளிட்ட இடங்களில் வானில் ட்ரோன்கள் தென்பட்டதாக ச... மேலும் பார்க்க

அமெரிக்கா, சீனா இடையே வலுக்கும் உறவு; குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் - எவ்வளவு தெரியுமா?

பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன... அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்... என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வ... மேலும் பார்க்க

`மத்திய அரசின் முகமாக இருந்தது தவறா?' - விக்ரம் மிஸ்ரி எதிர்கொள்ளும் ட்ரோல்கள்!

விக்ரம் மிஸ்ரி - கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்... அதிகம் பார்க்கும் முகம்!பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம... மேலும் பார்க்க

Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார். அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாக... மேலும் பார்க்க