"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!
ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தானின் சமீபத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் 20 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவர்கள்.
பூஞ்ச் நகர்ப் பகுதியில் ஆள்நடமாட்டம் மிகக் குறைவாக உள்ள நிலையில், பாகிஸ்தான் குண்டுவீச்சால் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பலாம் என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இந்நிலையில், எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு