செய்திகள் :

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

post image

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு துணிச்சலான விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்தியா - பாகிஸ்தானிடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் பல நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பாகிஸ்தான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இருநாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுமுகமான தீர்வை எட்டியதோடு, போர் நிறுத்தம் செய்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முப்படைகளுக்கும், ராணுவத்திற்கும் பிரதமர் மோடி தலைவணங்கினார்.

இருநாடு தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்கு வந்து விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்தியா தற்காலிகமாகத் தனது ராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் பாகிஸ்தானின் நடத்தையால் வழிநடத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க

முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான ப... மேலும் பார்க்க

ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!

புது தில்லி: நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்!

மும்பையிலுள்ள மகாரஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு மும்பையிலுள்ள மந்த்ராலயா எனப்படும் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேற்று (மே 12) மாலை மின்ன... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ... மேலும் பார்க்க