செய்திகள் :

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

post image

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

அதன்படி, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி மார்ச்சி 18ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 1.30 மணியளவில் வெளியாகியுள்ளது.

கடந்த 2024-ல் 25,724 பள்ளிகளில் 7,603 தேர்வு மையங்களும், 2025ஆம் ஆண்டில் 26,675 பள்ளிகளில் 7,837 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. அதில் 2024ல் தேர்வுக்கு 2251812 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2238827 பேர் தேர்வெழுதினர். அதில் 2095467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 93.60 சதவீதமாகும்.

2025ஆம் ஆண்டில் தேர்வுக்கு 2385079 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2371939 பேர் தேர்வெழுதினர். அதில் 2221636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 93.66 சதவீதமாகும்.

அதாவது 2024-2025 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 0.06 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2025ல் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்

திருவனந்தபுரம் - 99.79

விஜயவாடா - 99.79

பெங்களூரு - 98.90

சென்னை - 98.71

புணே - 96.54

அஜ்மீர் - 95.44

மேற்கு தில்லி - 95.24

கிழக்கு தில்லி - 95.07

சண்டீகர் - 93.71

பஞ்ச்குலா - 92.77

போபால் - 92.71

புவனேஸ்வர் - 92.64

பாட்னா - 91.90

டேராடூன் - 83.45

பிரயாக்ராஜ் - 79.53

நொய்டா - 81.29

குவஹாத்தி - 83.62

மண்டல வாரியாக திருவனந்தபுரம் முதலிடத்திலும், விஜயவாடா இரண்டாமிடத்தையும், சென்னை மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க

முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான ப... மேலும் பார்க்க

ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!

புது தில்லி: நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவ... மேலும் பார்க்க