"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர். தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஷ்குமார் (45) தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா (40) இவர்களுக்கு ஸ்ரீராம் (17) அபி ஸ்ரீ( 15 )என்ற மகன், மகள் உள்ளனர்.
சதீஷ் குமார் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர்.
கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் புறவழிச்சாலையில் அசூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்யா பலத்த காயங்களுடன் பலியானார். நிகழ்வை பார்த்தவர்கள் சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காயமடைந்த ஸ்ரீராம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியான நிலையில், பலந்த காயமடைந்த சதீஷ்குமார் அவரது மகள் அபி ஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து தொடர்பாக சுவாமிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!