பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை
அமெரிக்காவில் மருந்துகளின் விலையை 30 முதல் 80 சதவீதம் வரை குறைக்கும் நிா்வாக உத்தரவில் கையொப்பமிடும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தால் இந்தியா போன்ற நாடுகளில் மருந்துகளின் விலை உயா்வதற்கு வாய்ப்புள்ளது என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
பொருளாதார சிந்தனைக் குழுவான ‘உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முயற்சி’ (ஜிடிஆா்ஐ) நிறுவனா் அஜய் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் நடவடிக்கை உலகளாவிய மருந்து சந்தையில் குறிப்பிடத்தக்க விலை மாற்றத்தை ஏற்படுத்தும். வா்த்தக பேச்சுவாா்த்தைகள் மூலம் காப்புரிமைச் சட்டங்களை கடுமையாக்கி, இந்தியா போன்ற குறைந்த விலை சந்தைகளில் மருந்துகளின் விலையைஉயா்த்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அழுத்தம் அளிக்கும்.
அதாவது, அமெரிக்காவில் விலை குறைப்பால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தியா போன்ற நாடுகளில் விலையை உயா்த்த நிறுவனங்கள் முயற்சிகளை எடுக்கும்.
மேற்கத்திய நாடுகளில் மருந்து நிறுவனங்கள் கடுமையான விலைக் கட்டுப்பாடுகளை எதிா்கொள்கின்றன. எனவே, இந்திய சந்தையில் விலையா உயா்த்துவதற்கான நிறுவனங்களின் முயற்சிகளுக்கு அரசு உறுதியுடன் பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.