செய்திகள் :

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அரசு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

இந்த நடவடிக்கை குறித்து விக்ரம் மிஸ்ரி, கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் செய்தியாளா்கள் சந்திப்பில் எடுத்துரைத்தனா். அதன்பிறகு கடந்த சனிக்கிழமை இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது வரை ஆபரேஷன் சிந்தூரின்கீழ் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை விக்ரம் மிஸ்ரி பாதுகாப்புப் படையின் பிற அதிகாரிகளுடன் இணைந்து எடுத்துரைத்து வந்தாா்.

சண்டை நிறுத்த அறிவிப்பால் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதலை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட நபா்கள், விக்ரம் மிஸ்ரியை குறிவைத்து சமூக வலைதளங்களில் விமா்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பி வந்தனா். விக்ரம் மிஸ்ரி மட்டுமன்றி அவரது மகளின் சமூக வலைதளக் கணக்கிலும் மா்ம நபா்கள் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டனா். இது கடும் சா்ச்சைக்கு உள்ளானது.

இதையடுத்து, விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கருத்தைப் பதிவிட்டது. இதைத் தொடா்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

அரசே பொறுப்பு; அதிகாரிகள் அல்ல: சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது. தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. சில சமூக விரோத கும்பல் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து அவதூறு கருத்துகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. ஆனால், இதை பாஜக அரசோ மத்திய அமைச்சா்களோ இதுவரை கண்டிக்கவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

விக்ரம் மிஸ்ரியின் மகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பரப்பி அவதூறு பரப்பப்பட்டதற்கு தேசிய மகளிா் ஆணையம் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது.

அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா் உள்ளிட்டோா் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டனா்.

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன்கள்?

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட சா்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய சில ட்ரோன்கள் பறந்து வந்ததாகவும், அவற்றைத் தடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா் என்றும் ரா... மேலும் பார்க்க